▼

நூல்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா

 நூல்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா



ஆசிரியர்: கலையரசன்
ஆப்பிரிக்கா” என்றவுடன், அபிவிருத்தியின்மை, தொற்று நோய், பட்டினிச்சாவு, ஏழ்மை இவற்றிற்கு ஒத்த கருத்துள்ள சொல்லாக பலரால் புரிந்து கொள்ளப்படுகின்றது. உண்மையில் அவ்வாறான கருத்துகள் வேண்டுமென்றே மேற்குலக ஊடகங்களால் பரப்பப்படுகின்றன. “இருண்ட கண்டம்” என்று நிறவாதம் சூட்டிய பெயர், அன்றாட பேச்சு வழக்காகி விட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆப்பிரிக்கா பற்றிய தவறான கருத்துகளை, மக்கள் மத்தியிலும் பொதுக்கருத்துகளாக போதித்தது. இதனால் ஒரு ஐரோப்பியரின் பார்வையிலேயே, நாமும் ஆப்பிரிக்காவை பார்க்க கற்றுக்கொண்டுள்ளோம்.
சுருக்கமாக கூறுவதாக இருந்தால் ஆப்பிரிக்காவில் இல்லாத வளங்களே இல்லை எல்லாமே உண்டு
ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பை சுரண்டி அமெரிக்கா பணக்கார நாடானது. அடிமை வியாபாரத்தினால் மேற்கு ஐரோப்பியர்கள் செல்வந்தர்களானார்கள் என்று சுருக்கமாக கூறலாம்
“நமது நாடு இயற்கை வளம் நிறைந்தது. அது தான் எமது சாபக்கேடு.” என்று பல ஆப்பிரிக்கர்கள் குமுறுகின்றனர். வளங்களை சூறையாட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் போட்டியிடுகின்றன. ஆப்பிரிக்க தலைவர்கள் உள்ளூர் தரகு முதலாளிகளாக செயற்படுகின்றனர்.